×

குழந்தைகள் வார்டு அமைக்கிறார் ஹூமா

சென்னை: தமிழில் ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்துவிட்டு, தற்போது அஜித் குமாருடன் வலிமை படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கூறியதாவது:  மக்கள் சேவைக்காக பிரீத் ஆப் லைப் என்ற தொண்டு நிறுவனம் நடத்துகிறேன். கொரோனா பரவல் காலத்தில் சேவ் தி சில்ட்ரன் என்ற அமைப்புடன் இணைந்து பல பணிகளை செய்கிறேன். கொரோனா 2வது அலையில் 100க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்கி கொடுத்தேன்.  எதிர்கொள்ள இருக்கும் 3வது அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் என்பதால், டெல்லியில் உள்ள குழந்தைகளுக்காக 30 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு உருவாக்கி வருகிறேன். இந்த வார்டில் குழந்தைகளுக்கு சிகிச்சை தருவது மட்டுமின்றி, அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் விளையாட்டு, கார்ட்டூன் சேனல், படம் வரைய மற்றும் படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Tags : Huma , Huma sets up the children's ward
× RELATED விடாமுயற்சியில் ஆக்‌ஷன் ஹீரோயினாகும் ரெஜினா